/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு : காலாண்டு தேர்வுக்கு ஆசிரியர்கள் தீவிரம்விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு : காலாண்டு தேர்வுக்கு ஆசிரியர்கள் தீவிரம்
விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு : காலாண்டு தேர்வுக்கு ஆசிரியர்கள் தீவிரம்
விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு : காலாண்டு தேர்வுக்கு ஆசிரியர்கள் தீவிரம்
விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு : காலாண்டு தேர்வுக்கு ஆசிரியர்கள் தீவிரம்
பொள்ளாச்சி : காலாண்டு தேர்வு பாடத்திட்டத்தை நிறைவு செய்வதில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு புத்தகம் தாமதமாக வழங்கியதால், குறைவான பாடங்களை மட்டும் நடத்தி தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், அவசர கதியில் பாடத்தை கற்பிக்காமல், மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வழக்கமாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.தற்போது பாடத்தை விரைந்து முடிக்கும் வகையில் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்னும் 20 நாட்களுக்குள் காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.