/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் "டேமேஜ் பாலம்'தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் "டேமேஜ் பாலம்'
தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் "டேமேஜ் பாலம்'
தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் "டேமேஜ் பாலம்'
தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் "டேமேஜ் பாலம்'
ADDED : செப் 01, 2011 02:11 AM
தென்காசி : 'தென்காசியில் வாகன ஓட்டிகளின் எமனாக விளங்கும் டேமேஜ் பாலத்தை சீரமைக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் தெரு-மவுண்ட் ரோட்டை இணைக்கும் தெரு வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆய்க்குடிக்கு செல்லும் தனியார் மினி பஸ் இவ்வழியேதான் செல்கிறது. இத்தெருவில் ரேஷன் கடை எதிரே சிறிய அளவிலான பாலம் ஒன்று உள்ளது. இப்பாலம் 'டேமேஜ்' ஆகி பல மாதங்கள் ஆகியும் அதனை சீரமைக்கவில்லை. மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் இப்பாலத்தை மூழ்கடித்து விடுவதால் ரோடு எது, டேமேஜ் பாலம் எது என தெரியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிறிது குறைந்தாலும் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் இவ்வழியே நடந்து செல்லும் போது வாறுகாலில் விழுந்து விடும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு எமனாக விளங்கும் இந்த டேமேஜ் பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.