Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாங்குளம் சாயப்பட்டறைகளால் 4 கிராம குடிநீர் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிப்பு

மாங்குளம் சாயப்பட்டறைகளால் 4 கிராம குடிநீர் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிப்பு

மாங்குளம் சாயப்பட்டறைகளால் 4 கிராம குடிநீர் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிப்பு

மாங்குளம் சாயப்பட்டறைகளால் 4 கிராம குடிநீர் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிப்பு

ADDED : செப் 01, 2011 02:07 AM


Google News
மதுரை மாவட்டம் மாங்குளம் பகுதியில் நான்கு சாயப்பட்டறைகளால், நான்கு கிராமங்களின் குடிநீர் விஷமானது. விவசாய நிலங்களில் மண்ணின் தன்மையும் மாறியுள்ளது. மதுரை -மேலூர் ரோட்டில் கத்தப்பட்டி பிரிவில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது மாங்குளம். பெரியாறு கால்வாய் பாசனத்தால் இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம். வழிநெடுக நெல் பயிரிடப்பட்டு பச்சை பசேல் என காணப்படும். சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட 4 சாயப்பட்டறைகள், இப்பகுதி நிலத்தடி நீரை பாழ் படுத்தி விட்டன. அதிகம் பாதிக்கப்பட்டது, ஒத்தவீடு, தேத்தாம்பட்டி, பாரதிநகர், பொருசுபட்டி கிராமங்கள். ஊரை ஒட்டியும், விவசாய நிலங்களை ஒட்டியும் அமைந்துள்ள இந்த சாயப்பட்டறைகளை மூடக்கோரி பல்வேறு கலெக்டர்களிடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் இக்கிராமமக்கள் மனுக்கள் அளித்தும் பயனில்லை. மிக ஜோராக இந்த சாயப்பட்டறைகள் இயங்குகின்றன.ஒத்தவீடு பாரதிநகரைச் சேர்ந்த மலைச்சாமி கூறியதாவது: இச்சாயப்பட்டறைகளால் 3 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிணற்று நீர் மிகுந்த சுவையுள்ளதாக இருக்கும். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இந்த நீரை குடிக்க எடுத்துச்செல்வர். சாயப்பட்டறைகள் துவக்கப்பட்ட பின் கிணற்று நீரின் தன்மை மாறியது. தண்ணீரின் நிறம் மாறி, சுவை இன்றி குடிக்க தகுதியற்றதானது. தண்ணீரை குடித்தால் வயிற்றுக்கோளாறு போன்றவை ஏற்பட்டதால் அக்கிணற்றை முடினர். அதன் பின் ஆழ்குழாய் கிணறு அமைத்தோம். ஆனால் அதன் தண்ணீரும் சுவையற்று உள்ளது. ரூ.25 கொடுத்து கேன் தண்ணீரை தான் எல்லோரும் வாங்குகிறோம். அதை வாங்க வழியில்லாதவர்கள் மதுரை போன்ற இடங்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும்போது கேன்களில்தண்ணீர் பிடித்து வந்து குடிநீருக்கு பயன்படுத்துகிறார்கள். விவசாய நிலத்தின் நிறமும் மாறி விட்டது. இவ்வாறு கூறினார்.இச்சாயப்பட்டறைகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்பகுதி நிலத்தடிநீரும், விவசாய நிலங்களும் விஷத்தன்மையாகிவிடும்.யாரோ சிலர் சம்பாதிக்க, இப்பகுதியில் காலங்காலமாக வாழும் மக்கள் இச்சாயப்பட்டறைகள் வெளியேற்றும் ரசாயனப்பொருட்களால் சாவதா? கலெக்டர் சகாயம் இக்கிராமக்களை சாயப்பட்டறைகளிடம் இருந்து காப்பாற்றுவாரா?

நமதுசிறப்பு நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us