/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுய தொழில் பயிற்சி மையம் நடத்தி ரூ.1.5 கோடி சுருட்டியவர் கைதுசுய தொழில் பயிற்சி மையம் நடத்தி ரூ.1.5 கோடி சுருட்டியவர் கைது
சுய தொழில் பயிற்சி மையம் நடத்தி ரூ.1.5 கோடி சுருட்டியவர் கைது
சுய தொழில் பயிற்சி மையம் நடத்தி ரூ.1.5 கோடி சுருட்டியவர் கைது
சுய தொழில் பயிற்சி மையம் நடத்தி ரூ.1.5 கோடி சுருட்டியவர் கைது
ADDED : அக் 10, 2011 02:39 AM
கோவை : சுய தொழில் பயிற்சி மையம் நடத்தி அப்பாவி மக்களிடம் ரூ.1.5 கோடி சுருட்டி தலைமறைவானவர், கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(35).
சில ஆண்டுகளுக்கு முன் கோவை வந்தவர், பாப்பநாயக்கன்பாளையத்தில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் கம்பெனியை துவக்கினார். தொழிலை முன்னேற்ற யோசித்தவர், '10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், சுய தொழில் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என விளம்பரம் செய்தார்.வேலையில்லாதவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தினர். உற்பத்தி செய்த மெழுகுவர்த்தியை தானே கூடுதல் விலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி மூலப்பொருள்களை கொடுத்தார். ஒரு சில மாதங்கள் மட்டுமே மெழுகுவர்த்தியை கொள்முதல் செய்த சுரேஷ்பாபு, அடுத்து தனது நிறுவனத்தை மூடிவிட்டு, தலைமறைவானார். உற்பத்தி செய்த மெழுகுவர்த்தியுடன் சென்ற முதலீட்டாளர்கள், கதவு பூட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரித்த போலீசார், நேற்றுமுன் இரவு சுரேஷ்பாபுவை கைது செய்தனர். விசாரணையில் இவர் 800க்கும் அதிகமானோரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது தெரிந்தது. ''கைது செய்யப்பட்ட சுரேஷ்பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதுவரை 162 பேர் புகார் கொடுத்துள்ளனர். இதன்மூலம் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது கணக்கிடப்பட்டுள்ளது. விநாயகா கேண்டில்ஸ் உரிமையாளர் சுரேஷ்பாபுவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்,'' என்றனர்.


