/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாலிபருக்கு கொலை மிரட்டல் மூவர் கைதுவாலிபருக்கு கொலை மிரட்டல் மூவர் கைது
வாலிபருக்கு கொலை மிரட்டல் மூவர் கைது
வாலிபருக்கு கொலை மிரட்டல் மூவர் கைது
வாலிபருக்கு கொலை மிரட்டல் மூவர் கைது
ADDED : அக் 07, 2011 01:07 AM
காஞ்சிபுரம் : சொத்து தகராறில், வாலிபரை தாக்கிய மூன்று சகோதரர்களை, போலீசார் கைது செய்தனர்.
படப்பை இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ரவிச்சந்திரன், 26. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சீனிவாசன் மகன்களுக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், பூர்வீக சொத்தில், சீனிவாசனின் மகன்கள் லோகநாதன், 43, சுந்தர், 40, ரமேஷ், 38, ஆகிய மூவரும் வீடு கட்டினர். இதைக்கண்ட ரவிச்சந்திரன், கடந்த 4ம் தேதி காலை 11 மணிக்கு, வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ரவிச்சந்திரனை கட்டையால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து, அவர் மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார், மூவரையும் கைது செய்தனர்.


