/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கைபுதிய பென்ஷன் திட்டத்தை கைவிட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : ஆக 28, 2011 11:05 PM
கடலூர் : புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டுமென ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பண்ருட்டி வட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க சிறப்புக் கூட்டம் புதுப்பேட்டையில் நடந்தது. தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களான மாவட்டத் தலைவர் சாம்பசிவம், செயலர் கண்ணன், விழிப்புரம் மாவட்ட செயலர் ராதா பேசினர். பத்ரலிங்கம் அறிக்கை வாசித்தார். ஜீவானந்தம், ராஜாராமன் வாழ்த்திப் பேசினர். வட்டத் தலைவராக பலராமன், செயலராக ராமலிங்கம், பொருளாளராக ராமானுஜம் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நபர் குழுவில் முரண்பாடுகளை களைதல், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுவது, மருத்துவ சிகிச்சைக்கு அடையாள அட்டை வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சண்முகம் நன்றி கூறினார்.