/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுஉயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி: லாரி ஸ்டிரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களில் உயிர் காக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் தமிழ்இனியன் கூறியதாவது: வழக்கமாக மெடிக்கல் ஸ்டோர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை மாவட்டத்தில் உள்ள மொத்த மருந்து விற்பனையாளர்களிடத்தில் ஆர்டரின் பேரில் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஐந்து நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருவதால் மொத்த மருந்து விற்பனையாளர்களுக்கு பார்சல் சர்வீஸில் வரும் மருந்து மற்றும் மாத்திரைகள் தடைப்பட்டுள்ளது. இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்கள் தாக்கிய நோயாளிகள் தினம் தவறாமல் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உபயோகிக்கும் மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். காவேரிப்பட்டணத்தில் உள்ள மொத்த மருந்து விற்பனையாளர்களிடம் இருந்து வெளி மாவட்டத்தை சேர்ந்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்களும் மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வாங்கி செல்வார்கள்.
இங்கு கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் அதிகம் விற்பனை செய்யப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் சளி மற்றும் காய்சலுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும். மத்திய அரசு லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் தமிழ்இனியன் கூறியதாவது: வழக்கமாக மெடிக்கல் ஸ்டோர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை மாவட்டத்தில் உள்ள மொத்த மருந்து விற்பனையாளர்களிடத்தில் ஆர்டரின் பேரில் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஐந்து நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருவதால் மொத்த மருந்து விற்பனையாளர்களுக்கு பார்சல் சர்வீஸில் வரும் மருந்து மற்றும் மாத்திரைகள் தடைப்பட்டுள்ளது. இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்கள் தாக்கிய நோயாளிகள் தினம் தவறாமல் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உபயோகிக்கும் மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். காவேரிப்பட்டணத்தில் உள்ள மொத்த மருந்து விற்பனையாளர்களிடம் இருந்து வெளி மாவட்டத்தை சேர்ந்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்களும் மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வாங்கி செல்வார்கள். இங்கு கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் அதிகம் விற்பனை செய்யப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் சளி மற்றும் காய்சலுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும். மத்திய அரசு லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.