ADDED : ஆக 22, 2011 10:54 PM
பீளமேடு : அமெக்ஸ் அலாய் நிறுவனம், இந்திய பவுண்டரி மேன் அமைப்பின், சிறந்த பவுண்டரி 2011 விருதை பெற்றுள்ளது.
கோவை சத்தி ரோட்டில், அமெக்ஸ் அலாய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், நியூமெரிக் பவர் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் 480 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் நியூமெரிக் பவர் சிஸ்டம், இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், கோவையில் சிறந்த பவுண்டரி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. புதிய நிர்வாகத்தின் வருகை விழாவில் இயக்குனர் செல்லப்பன் பேசினார். நியூமெரிக் பவர் சிஸ்டம் நிறுவன அலுவலர் காயாரோஹனம், ஆடிட்டர் முரளிதரன் பங்கேற்றனர். அமெக்ஸ் அலாய் நிறுவனம், சமீபத்தில் கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நடந்த தேசிய பவுண்டரி நாள் விழாவில், சிறந்த பவுண்டரிகளுக்கான விருதை, பெற்றுள்ளது.