/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பயணிகளை ஏமாற்றும் பஸ்கள் இரவில் பரிதவிக்கும் பரிதாபம்பயணிகளை ஏமாற்றும் பஸ்கள் இரவில் பரிதவிக்கும் பரிதாபம்
பயணிகளை ஏமாற்றும் பஸ்கள் இரவில் பரிதவிக்கும் பரிதாபம்
பயணிகளை ஏமாற்றும் பஸ்கள் இரவில் பரிதவிக்கும் பரிதாபம்
பயணிகளை ஏமாற்றும் பஸ்கள் இரவில் பரிதவிக்கும் பரிதாபம்
ADDED : செப் 10, 2011 02:05 AM
திருப்பூர் : ஒரு வழிப்பாதையில் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று
விடுவதால், மூன்று பஸ் ஸ்டாப்களில் காத்திருக்கும் பயணிகள் இரவில் வீடு
திரும்ப முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
போக்குவரத்து நிறைந்த சாலைகளில்
அவினாசி ரோடும், பி.என்., ரோடும் முதன்மையானது. தினமும் லட்சக்கணக்கான
வாகனங்கள், அவினாசி ரோடு வழியாக நகருக்குள் வந்து செல்கின்றன. சாந்தி
தியேட்டர், மேட்டுப்பாளையம், மில்லர் ஸ்டாப், புஷ்பா தியேட்டர் வழியாக புது
பஸ் ஸ்டாண்டுக்கு பல வாகனங்கள் வருகின்றன.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில்
இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக குன்னத்தூர், நம்பியூர், பெருமாநல்லூர்
ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், அவினாசி ரோட்டில் குமார் நகர் வரை
சென்று, அங்கிருந்து, பி.என்., ரோட்டில் செல்ல வேண்டும். போக்குவரத்து
நெரிசலை தவிர்க்க போலீசார் இம்முறையை கையாண்டுள்ளனர். பகலில் விதிமுறையை
பின்பற்றும் டவுன் பஸ்கள், இரவில் அத்துமீறுகின்றன. இரவு 9.00 மணிக்கு மேல்
புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள்
எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒரு வழிப்பாதையில், குமார் நகர் செல்லாமல்
ஒரு வழிப்பாதையில் பஸ்சை திருப்பி விடுகின்றனர். குன்னத்தூர், நம்பியூர்
செல்லும் பஸ்சுக்காக அவினாசி ரோட்டில் உள்ள புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்,
பங்களா ஸ்டாப், சாமுண்டிபுரம் சிக்னல்களில் காத்திருப்போர் பஸ் வராமல்
ஏமாற்றம் அடைகின்றனர். அலுவலக பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல
காத்திருக்கும் பெண்கள் பஸ் இல்லாமல் பரிதவிக்கின்றனர். இதேபோல், புதிய பஸ்
ஸ்டாண்ட் சென்று திரும்பும் சத்தி, மைசூர், மதுரை, தேனி பஸ்களும், டவுன்
பஸ்களை போன்றே ஒரு வழிப்பாதையில் பயணத்தை மேற்கொள்வதால், மேற்கண்ட மூன்று
பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் வெளியூர் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு
வழிப்பாதையில் பஸ்கள் செல்லாமல் இருக்க, டிவைடர் வைத்து மறைக்க,
போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.