ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கு ஆக்.23-ம் தேதி தள்ளி வைப்பு
ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கு ஆக்.23-ம் தேதி தள்ளி வைப்பு
ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கு ஆக்.23-ம் தேதி தள்ளி வைப்பு
ADDED : ஜூலை 28, 2011 06:40 AM
நியூயார்க்: முன்னாள் ஐ.எம்.எப்.தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கு ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டொமினிக் ஸ்டிராஸ்கான் (64) முன்னாள் சர்வதேச நிதிஆணையத்தின் தலைவராக இருந்தார். இவர் அமெரிக்கா சென்றிருந்த போது ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது 32 வயது பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த மே மாதம் 14-ம் தேதி குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு நியூயார்க்கில் வீட்டுக்காவலில் இருந்தார். தற்போது ஜாமினில் இருக்கும் இவர் மீதான வழக்கு நியூயார்க் கோர்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரியிருந்தார். ஸ்டிராஸ்கான் சார்பில் வக்கீல் வில்லியம்டெய்லர், பெஞ்சமின் பிராபின் ஆகியோர் ஆஜரானயினர். நீதிபதி ஒபுஸ், வழக்கினை வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்து மறு விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையே , ஹோட்டல் பணிப்பெண் நபீஸாடூ டயல்லோ, செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டிராஸ்கானை தண்டிக்க வேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவர் பண பலம் மற்றும் செல்வாக்கினால் தப்பிக்க முயற்சிக்கிறார் என்றார்.