Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் தானியங்கி மின்கட்டண இயந்திரம் அறிமுகம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் தானியங்கி மின்கட்டண இயந்திரம் அறிமுகம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் தானியங்கி மின்கட்டண இயந்திரம் அறிமுகம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் தானியங்கி மின்கட்டண இயந்திரம் அறிமுகம்

ADDED : ஆக 05, 2011 01:27 AM


Google News
கோவை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், கோவை டாடாபாத் அலுவலகத்தில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான விழா, டாடாபாத் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் தங்களது இருமாத மின் கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ இந்த தானியங்கி இயந்திரம் மூலமாக செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரம் தற்போது அலுவலக நேரத்தில் மட்டும் இயங்கும்; விரைவில் 24 மணி நேர சேவையாக மாற்றப்படும்.கோவை மண்டலத்துக்குட்பட்ட கோவை (மாநகர், வடக்கு, தெற்கு), நீலகிரி, திருப்பூர் மற்றும் உடுமலை வட்டங்களில் உள்ள மின் நுகர்வோர் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னைக்கு அடுத்ததாக கோவையில் டாடாபாத் அலுவலகத்தில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சேவை மையங்கள் இன்னும் 45 இடங்களில் விரைவில் துவக்கப்படவுள்ளது.இச்சேவையை பயன்படுத்தும் மின் பயனீட்டாளர்கள், தங்களது மின் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மின் இணைப்பு எண்களை தவறாமல் எடுத்து வந்து சேவை மையத்தில் குறிப்பிட்டுள்ளபடி இயந்திரத்தை இயக்கலாம். இந்த சேவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், போர்ப்ஸ் டெக்னோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவைக்கு மின் கட்டணத்தை தவிர வேறு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. எனவே, மின் நுகர்வோர் இச்சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, தலைமை பொறியாளர் தங்கவேலு பேசினார்.விழாவில், மாநகர் மேற்பார்வை பொறியாளர் திருமூர்த்தி, செயற்பொறியாளர்கள் மணி, சாந்தி, கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us