/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொன்முடியின் நண்பர் வங்கி கணக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வுபொன்முடியின் நண்பர் வங்கி கணக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு
பொன்முடியின் நண்பர் வங்கி கணக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு
பொன்முடியின் நண்பர் வங்கி கணக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு
பொன்முடியின் நண்பர் வங்கி கணக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு
ADDED : செப் 29, 2011 01:44 AM
விழுப்புரம் : தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நண்பர் பேராசிரியர் மணிவண்ணன் வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.நில மோசடி வழக்கில் கடந்த 31ம் தேதி பொன்முடி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு மற்றும் அரசு பணி நியமனத்தில் முறைகேடுகள் குறித்த புகாரின் பேரில் பொன்முடி வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று முன்தினம் ரெய்டு மேற்கொண்டனர். இந்நிலையில் பொன்முடியின் நண்பர் சிகா அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் நகர கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள கணக்கு மற்றும் லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையிட்டனர். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கன்னியப்பன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்தனர். விசாரணையின்போது, வங்கி மேலாளர் மனோகர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


