/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களிடம் மாற்றுக் கட்சியினர் "கேன்வாசிங்' வேட்டைசீட் கிடைக்காத அதிருப்தியாளர்களிடம் மாற்றுக் கட்சியினர் "கேன்வாசிங்' வேட்டை
சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களிடம் மாற்றுக் கட்சியினர் "கேன்வாசிங்' வேட்டை
சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களிடம் மாற்றுக் கட்சியினர் "கேன்வாசிங்' வேட்டை
சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களிடம் மாற்றுக் கட்சியினர் "கேன்வாசிங்' வேட்டை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளவர்களை, உறவு முறை கூறி மாற்று கட்சிக்கு ஆதரவாக மறைமுக பணியாற்ற ரகசிய 'கேன்வாசிங்' துவங்கிவிட்டது.
சீட் கிடைக்காத அதிருப்தி கோஷ்டியினர், தனது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர், முன்பு எதிர் கட்சியில் இருந்திருந்தால், அப்போது, எப்படியெல்லாம் 'தலைமை'யை விமர்சித்தார், என்பதை கீழ்மட்ட கட்சி தொண்டர்களிடம் கூறிவருவதால் கட்சியின் ஓட்டுகள் கூட மாறிவிழும் சூழல் உருவாகி வருகிறது. மேலும் இதுபோல் அதிருப்தியாளர்களை கண்டு பேசுவதற்காக கட்சி சார்பற்ற ஜாதிய ரீதியிலான நடுநிலையாளர்கள் பலர் உருவாகி உள்ளனர். 'சீட் கிடைக்காவிட்டால் என்ன, நம்ம ஜாதிக்காரர் நிற்கிறாரு... அவரை வெற்றி பெற வைத்தால், நமக்கு சீட் கொடுக்காததால்தான் தோல்வியடைந்துவிட்டது என பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்' என அதிருப்தியாளர்களிடம் கூறி வருகின்றனர். இதை ராமநாதபுரம் நகராட்சியில் பரவலாக காணமுடிகிறது.


