அமைச்சர் பேச்சால் மக்கள் அதிருப்தி
அமைச்சர் பேச்சால் மக்கள் அதிருப்தி
அமைச்சர் பேச்சால் மக்கள் அதிருப்தி
ADDED : அக் 08, 2011 01:21 AM
குமாரபாளையம்: ''அ.தி.மு.க., வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் வாக்காளர்களுக்கு, அரசுத் திட்டங்கள் எளிதில் கிடைக்கும்,'' என, தேர்தல் அலுவலக திறப்பு விழாவில், வருவாய்த்துறை அமைச்சர் பேசியது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் நாராட்சி, 7வது வார்டு அ.தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. அலுவலகத்தை, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்துப் பேசினார். அப்போது, ''அ.தி.மு.க., வேட்பாளர்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் வாக்காளர்களுக்கு, அரசின் இலவசப் பொருட்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற வாக்காளர்களுக்கு அவை கிடைப்பது தாமதமாகும்,'' என, பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு, மக்கள் மற்றும் பிற கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில், சேர்மன் வேட்பாளர் நாகராஜன், கவுன்சிலர் வேட்பாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


