Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாலிபர் சங்க நிர்வாகியிடம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., :உதவி கமிஷ்னர் விசாரணை

வாலிபர் சங்க நிர்வாகியிடம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., :உதவி கமிஷ்னர் விசாரணை

வாலிபர் சங்க நிர்வாகியிடம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., :உதவி கமிஷ்னர் விசாரணை

வாலிபர் சங்க நிர்வாகியிடம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., :உதவி கமிஷ்னர் விசாரணை

ADDED : ஜூலை 14, 2011 01:35 AM


Google News

சேலம்: சேலத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியிடம், எஸ்.ஐ., லஞ்சம் கேட்டது தொடர்பாக, நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷ்னர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம், 25வது வார்டு மணிபுரத்தை சேர்ந்தவர் மகராஜ்(25). இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 25வது வார்டு கிளை நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம், அவர் மொபட்டில் மணல் மேடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் எஸ்.ஐ., குமாரசாமி, மகராஜிடம், 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், மொபட்டை நிறுத்திவிட்டு செல்லும்படி தெரிவித்துள்ளார். இது குறித்து, மகராஜ், மாநகர பொறுப்பாளர் பிரவீண்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே பிரவீண்குமார், எஸ்.ஐ., குமாரசாமியின் ஃபோனில் தொடர்பு கொண்டு, மொபட்டை விடுவிக்கும்படி கேட்டுள்ளார். அவரிடமும், 500 ரூபாய் வேண்டும் என்று குமாரசாமி கேட்டுள்ளார். அவரிடம் பேரம் பேசியதில், 300 ரூபாய் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொண்டார். இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை மொபைல் ஃபோனில் பதிவு செய்தார் பிரவீண்குமார். எஸ்.ஐ., லஞ்சம் கேட்டது குறித்து நேற்று, சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சொக்கலிங்கத்திடம் புகார் தெரிவித்தார். புகார் மீது விசாரணை நடத்தும்படி, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷ்னர் உதயகுமாருக்கு, கமிஷ்னர் சொக்கலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து, புகார்தாரர்கள் மகராஜ், பிரவீண்குமார், புகாரில் சிக்கிய எஸ்.ஐ., குமாரசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us