ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பணி மூப்பு மாற்ற உத்தரவு
ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பணி மூப்பு மாற்ற உத்தரவு
ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பணி மூப்பு மாற்ற உத்தரவு
ADDED : செப் 04, 2011 01:19 AM

சென்னை: சட்டத் துறையில் சார்பு செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிக்கு, 1977ம் ஆண்டு முதல் சீனியாரிட்டி கணக்கிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டத் துறையில் சார்பு செயலராக பணியாற்றியவர் எஸ்.முத்து. 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சென்னை ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனுவில், 'உதவி துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் இருந்து, அதாவது, 1978ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி முதல் சீனியாரிட்டியை கணக்கிட உத்தரவிட வேண்டும். அதன்படி பதவி உ யர்வு, சலுகைகள் வழங்க வேண்டும்' என, கோõரியிருந்தார். மனுவை நீதிபதி பாஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிசார் அகமது ஆஜரானார். நீதிபதி பாஷா பிறப்பித்த உத்தரவு: கடந்த 2002ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனுதாரர், இதுநாள் வரை சட்ட ரீதியாக போராடி வருகிறார். மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியதை பதிவு செய்து கொண்டு, 2002ம் ஆண்டு மார்ச் மாதம், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதில் இருந்து, 1977ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் இருந்து இளநிலை உதவியாளராக மனுதாரர் பணியாற்றியது தெளிவாகிறது. அதன்படி, சீனியாரிட்டியை மனுதாரருக்கு நிர்ணயித்திருக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மனுதாரருக்கு சீனியாரிட்டி நிர்ணயிக்க வேண்டும் என, சட்டத் துறை செயலருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் பணி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் துறை வசம் உள்ளது. சீனியாரிட்டி நிர்ணயம் தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் கருத்துக்களை பெற தேவையில்லை. மனுதாரரை அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டத் துறை செயலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இளநிலை உதவியாளராக, 1977ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் இருந்து பணியாற்றியதை கணக்கிட்டு, சீனியாரிட்டியை சட்டத் துறை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி பதவி உயர்வுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். எட்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பாஷா உத்தரவிட்டுள்ளார்.