/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பார் ஊழியர்களுக்கு "கடி' இரண்டு பேருக்கு சிறைபார் ஊழியர்களுக்கு "கடி' இரண்டு பேருக்கு சிறை
பார் ஊழியர்களுக்கு "கடி' இரண்டு பேருக்கு சிறை
பார் ஊழியர்களுக்கு "கடி' இரண்டு பேருக்கு சிறை
பார் ஊழியர்களுக்கு "கடி' இரண்டு பேருக்கு சிறை
ADDED : ஜூலை 28, 2011 10:05 PM
கோவை : கோவை, கே.ஜி.,தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதிர்வேல் (27), சூர்யா (25), நந்தகுமார் (25).
நண்பர்களான இவர்கள், 2010, டிச.,5ம்தேதி இரவு 10.00 மணிக்கு மேல்,பேரூர் ரோடு செட்டிவீதியில் உள்ள டாஸ்மாக் மதுவிற்பனைக் கடைக்கு சென்றனர். கடை பூட்டப்பட்டிருந்தது கண்டு, அருகில் உள்ள பாருக்குள் புகுந்தனர். அங்கிருந்த பார் ஊழியர்கள் பிரபு (23), காந்தி (24) ஆகியோர்,''வேலை நேரம் முடிந்து விட்டது. வெளியே செல்லுங்கள்'' என விரட்டினர். ஆத்திரமடைந்த நண்பர்கள். ஊழியர்களை தரக்குறைவாக திட்டி, கல்லால் தாக்கி, கைகளை 'கடி'த்து காயப்படுத்தினர். இவ்வழக்கு ஜே.எம்.எண்:5 கோர்ட்டில் நடந்தது. மாஜிஸ்திரேட் கோபிநாதன் விசாரித்து, பார் ஊழியர்களை கடித்து காயப்படுத்திய கதிர்வேல், சூர்யாவுக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தார். நந்தகுமார் விடுவிக்கப்பட்டார்.


