/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழாஉமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழா
உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழா
உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழா
உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழா
ADDED : ஆக 29, 2011 11:22 PM
ஏரல் : உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.
ஏரல் அருகேயுள்ள முத்தாரம்மன் கோயிலின் இந்த ஆண்டு கொடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 26ம் தேதி முதல் ஆரம்பமானது. 26, 27ம் தேதிகளில் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 28ம் தேதி இரவு தீபாராதனை மற்றும் நகைச்சுவை இன்னிசை, பட்டிமன்றம் நடந்தது. நேற்று காலை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனை நடந்தது. இன்று அம்மனுக்கு கொடை விழா நடக்கிறது. காலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், 7 மணிக்கு தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், 6 மணிக்கு சிங்காரி மேளம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, அன்னதானம், நவீன வில்லிசை, கரகாட்டம், இரவு 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், இரவு 1 மணிக்கு பார் விளையாட்டு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாவிளக்கு, கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல், இரவு 2 மணிக்கு அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஊர் வீதிகளில் பவனி வந்து அருள் புரிதல், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள்பால் பொங்கலிடுதல், 10 மணிக்கு ஊர்மக்கள் பொங்கலிடுதல், மதியம் தீபாராதனை நடக்கிறது. செப்.1ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை வாழ் உமரி மாநகர் நாடார் நலச்சங்கம் சார்பில் சென்னை கலைஞர்கள் வழங்கும் புதிய பூமியின் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை கிராம விவசாயிகள் சங்க தலைவர் கந்தப்பழம் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் பிரபாகரன், கிருஷ்ணன், சிங்கராஜ், கணேசன் ஆகியோர் செய்துள்ளனர்.