/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிக்கு வலைபெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிக்கு வலை
பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிக்கு வலை
பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிக்கு வலை
பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிக்கு வலை
ADDED : ஜூலை 15, 2011 12:56 AM
கிள்ளை : சிதம்பரம் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே சின்னவாய்க்காலை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி. இவர் மனைவி அஞ்சம்மாள், 46. இவர் தன் மருமகன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் மகள் வசுமதியுடன் பாதுகாப்பிற்காக கிள்ளையில் தங்கி இருந்தார். கிள்ளை மீனவர் காலனி பிச்சாவரம் சாலையில் தன் மகள் வசுமதி நடத்தி வந்த பெட்டிக்கடையில் நேற்று முன் தினம் இரவு கடையில் இருந்தார். அப்போது மர்ம ஆசாமி சிகரெட் வாங்கிக் கொண்டு அதற்குரிய காசை கொடுப்பது போல் கீழே போட்டுள்ளார்.
கீழே விழுந்த காசை அஞ்சம்மாள் குனிந்து எடுத்த போது கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளான். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். இது வரை கிள்ளைப் பகுதியில் இல்லாத நூதன திருட்டால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். கிள்ளை போலீஸ் நிலையத்தில் போதுமான போலீசார் இல்லாததால் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு கூட செல்ல ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.