/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'
போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'
போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'
போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'
ADDED : ஜூலை 28, 2011 02:47 AM
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நகை கடையில், தங்க முலாம் பூசப்பட்ட கவரிங்
நகையை கொடுத்து, நகையை வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில் துபாய் ஜுவல்லரி நகை கடை உள்ளது.
அந்தக்கடைக்கு, நேற்று காலை 11 மணியளவில் கணவன், மனைவி இருவர் நகை வாங்க
வந்துள்ளனர்.அவர்கள் கொண்டு வந்த நான்கு செயின், ஒரு மோதிரம் என 109 கிராம்
தங்க நகையை கொடுத்துள்ளனர். அதற்கு மாற்றாக, 90 கிராம் நகை, ரொக்கம் 5,000
ரூபாய் கொடுத்து பெற்றுள்ளனர்.கடை ஊழியர் நகையை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது, அவர்கள் கொடுத்துச் சென்றது, தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை
எனத் தெரியவந்தது.கடை உரிமையாளர் ரஷீத், தம்மம்பட்டி போலீஸில் புகார்
செய்துள்ளார். அதன்பேரில், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகையை கொடுத்து, ஒரிஜனல் நகையை வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.