Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனி ஒதுக்கீட்டில் ஆதிக்க வாய்ப்புகாய் நகர்த்தும் அரசியல்வாதிகள்

தனி ஒதுக்கீட்டில் ஆதிக்க வாய்ப்புகாய் நகர்த்தும் அரசியல்வாதிகள்

தனி ஒதுக்கீட்டில் ஆதிக்க வாய்ப்புகாய் நகர்த்தும் அரசியல்வாதிகள்

தனி ஒதுக்கீட்டில் ஆதிக்க வாய்ப்புகாய் நகர்த்தும் அரசியல்வாதிகள்

ADDED : செப் 22, 2011 01:51 AM


Google News
வாழப்பாடி: எஸ்.சி., எஸ்.டி., இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அந்தந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், துணை தலைவர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.தமிழக உள்ளாட்சி தேர்தலில், இனசுழற்சி இடஒதுக்கீடு முறையில், எஸ்.சி., எஸ்.சி.,(பெண்) எஸ்.டி., எஸ்.டி., (பெண்) மற்றும் பொது (பெண்) என, கிராம ஊராட்சி முதல் மாநகர மேயர் வரையிலான பதவி வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.பெரும்பாலும், பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த பகுதியில் அரசியல்பலம் உள்ளவர்கள், தங்களது மனைவி அல்லது மகளை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற செய்து, உள்ளாட்சி நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.அதேபோன்று, எஸ்.சி., எஸ்.டி., இனத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் இல்லாதவர்களை தேடி பிடித்து, அந்தந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தலில் நிறுத்துகின்றனர்.எஸ்.சி., மற்றும் எஸ்.டி., இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், துணைத்தலைவர் பதவியை பிடிப்பவர்கள், தலைவருக்கு இணையாக நிர்வாகத்தில்ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை பெறுகின்றனர்.

குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் தலைவருக்கு மட்டுமின்றி, துணை தலைவருக்கும் ஊராட்சி நிதியை திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தவும், காசோலையில் கையொப்பமிடும் அதிகாரமும் நடைமுறையில் இருந்து வருகிறது.எஸ்.சி., மற்றும் எஸ்.டி., இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர், வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, துணை தலைவர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us