/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிதியின்றி செயலிழந்த வீட்டு வசதி சங்கங்கள் : 18 மாதமாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்புநிதியின்றி செயலிழந்த வீட்டு வசதி சங்கங்கள் : 18 மாதமாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு
நிதியின்றி செயலிழந்த வீட்டு வசதி சங்கங்கள் : 18 மாதமாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு
நிதியின்றி செயலிழந்த வீட்டு வசதி சங்கங்கள் : 18 மாதமாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு
நிதியின்றி செயலிழந்த வீட்டு வசதி சங்கங்கள் : 18 மாதமாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு
ADDED : ஆக 02, 2011 11:12 PM
முதுகுளத்தூர் : கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு கடனுதவி வழங்காததால், வங்கிகள் செயலிழந்து உள்ளன.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் நகர், தாலுகாக்களில் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாயின் அடிப்படையில் ஆண்டு தோறும் 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை மானியத்தில் கடன் வழங்கபடும். அதேபோல் தாலுகாவில் உள்ள சங்கங்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கும். இவற்றிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கடனுதவி வழங்கப்படவில்லை. இதனால் செயல்பாடின் மூடுவிழா காணும் நிலைக்கு தள்ளபட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்க்கான வீட்டு கடன்களை தள்ளுபடி செய்தது. இதை சங்கங்களுக்கு அரசு வழங்கவில்லை. இதனால் சங்கங்கள் வெறும் பதிவேடுகளை மட்டும் கொண்டு காட்சி பொருளாய் உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.மேலும் சாமானிய மக்கள் வீட்டு கடன் கோரி, தேசிய வங்கிகளுக்கு மாதக்கணக்கில் அலைந்து வருகின்றனர். நலிவடைந்த வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவும், ஊழியர்களுக்கு நிலுவை உள்ள சம்பளத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்,'' என்றார்.