ADDED : ஜூலை 31, 2011 02:56 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், அரசுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவங்குகிறது.பொள்ளாச்சி மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, ஆக., 7ம் தேதி நடக்கிறது.
ஆர்.டி.ஓ., அறிவுரையின் படி, பொள்ளாச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில், அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல், காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. விபரங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை நிறுவனர் ரத்னக்குமார்- 98425-23917, தலைவர் கதிரேசன் - 99760-43924, திட்ட அலுவலர் ராமசாமி- 89034-29295 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.