/உள்ளூர் செய்திகள்/சென்னை/கடன் பாக்கியால் எரிபொருள் வாங்க முடியவில்லை : கிங்பிஷர் விமானங்கள் ரத்துகடன் பாக்கியால் எரிபொருள் வாங்க முடியவில்லை : கிங்பிஷர் விமானங்கள் ரத்து
கடன் பாக்கியால் எரிபொருள் வாங்க முடியவில்லை : கிங்பிஷர் விமானங்கள் ரத்து
கடன் பாக்கியால் எரிபொருள் வாங்க முடியவில்லை : கிங்பிஷர் விமானங்கள் ரத்து
கடன் பாக்கியால் எரிபொருள் வாங்க முடியவில்லை : கிங்பிஷர் விமானங்கள் ரத்து
ADDED : செப் 27, 2011 10:59 PM
திரிசூலம் : கடன் பாக்கியால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்க மறுத்ததால், சென்னையிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த, 13 விமானங்களை, கிங்பிஷர் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனம், இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களில் இருந்து எரிபொருள் வாங்குகிறது. இந்த வகையில், மொத்தம், 2,500 கோடி ரூபாய் இந்நிறுவனங்களுக்கு பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், கிங்பிஷர் நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, கிங்பிஷர் நிறுவனம் தன் விமான சேவையில், பல விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த வகையில், சென்னையிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமான், கோவை, பெங்களூரு, விசாகப்பட்டினம், திருச்சி, ராஜமுந்திரி, சேலம், மதுரை மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கான விமானங்கள், பல ரத்தாகியுள்ளன. இந்நிலையில், 'தொழில் நுட்ப கோளாறு காரணமாக தங்கள் விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்' என, கிங்பிஷர் நிறுவனம் தெறிவித்துள்ளது.


