/உள்ளூர் செய்திகள்/மதுரை/உணவு தானிய ஒதுக்கீடுமத்திய அரசு பாரபட்சம்உணவு தானிய ஒதுக்கீடுமத்திய அரசு பாரபட்சம்
உணவு தானிய ஒதுக்கீடுமத்திய அரசு பாரபட்சம்
உணவு தானிய ஒதுக்கீடுமத்திய அரசு பாரபட்சம்
உணவு தானிய ஒதுக்கீடுமத்திய அரசு பாரபட்சம்
ADDED : ஆக 24, 2011 01:24 AM
மதுரை:பொது வினியோக திட்டத்தை சீர்குலைக்க, உணவு தானிய ஒதுக்கீட்டில்
மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என, சி.ஐ.டி.யு., கூட்டுறவு ஊழியர்
சம்மேளனம்
குற்றம் சாட்டியது.மதுரையில் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம், தலைவர்
குமார் தலைமையில் நடந்தது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது வினியோக
திட்டத்தை பலப்படுத்துவது அவசியம். இதை சீர்குலைக்க உணவு தானிய
ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தற்போது, தமிழகத்திற்கு
மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை குறைத்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு மேல், கீழ்
என ரேஷன் கார்டுகளை பிரிக்க எவ்வித அளவுகளும் பின்பற்றப்படவில்லை.
உணவு தானிய மானியத்தை ரொக்கமாக வழங்க சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு
முனைந்துள்ளது. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை
பாதுகாக்க செப்.24 முதல் 25 வரை வேலூரில் மாநில மாநாடு நடத்தப்படும் என
தீர்மானிக்கப்பட்டது.மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள்
வசந்தன், சுந்தர்ராஜன், செயல் தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர்கள்
அமர்நாத், சின்னச்சாமி பங்கேற்றனர்.


