/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பள்ளியில் குடிநீர் இன்றி தவிக்கும் மாணவர்கள்பள்ளியில் குடிநீர் இன்றி தவிக்கும் மாணவர்கள்
பள்ளியில் குடிநீர் இன்றி தவிக்கும் மாணவர்கள்
பள்ளியில் குடிநீர் இன்றி தவிக்கும் மாணவர்கள்
பள்ளியில் குடிநீர் இன்றி தவிக்கும் மாணவர்கள்
ADDED : ஆக 11, 2011 10:45 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 690க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. தாகம் தீர்க்க போக்குவரத்து டிப்போவுக்கு ஒரு கி.மீ., தூரம் நடந்து செல்கின்றனர். சுற்றுச்சுவர் முழுமையாக இல்லாததால் பள்ளி நேரங்களில் வெளியாட்களின் பிரவேசம் அதிகமாக உள்ளது. இரவில் சமூக வி@ராதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. இப்பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். என@வ குடிநீர், சுற்றுச்சுவர் நிழற்குடை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


