அதிக வேட்பாளர்களை சந்திக்க கூடுதல் சின்னங்கள்: மாநில தேர்தல் கமிஷன் வெளியீடு
அதிக வேட்பாளர்களை சந்திக்க கூடுதல் சின்னங்கள்: மாநில தேர்தல் கமிஷன் வெளியீடு
அதிக வேட்பாளர்களை சந்திக்க கூடுதல் சின்னங்கள்: மாநில தேர்தல் கமிஷன் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அதை சந்திக்க வசதியாக கூடுதல் சின்னங்களை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பலமுனை போட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுவதால், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் ஒதுக்க வசதியாக, கூடுதல் சின்னங்களையும் மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தாத புதிய சின்னங்கள் தான் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளன. ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு தனித்தனியாக தலா 30 சின்னங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தனியாக 30 சின்னங்களும், மாவட்ட கவுன்சிலர், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் தனியாக 30 சின்னங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
- எஸ்.அசோக்குமார் -