ADDED : ஆக 30, 2011 07:32 PM
சென்னை:நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
நில அபகரிப்பு, மிரட்டல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோவை சிறையில், வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமின் வழங்கி நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார். தேவைப்படும் போது, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.


