/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : செப் 26, 2011 10:35 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்திருமலையில் பிரம்மோற்சவம் விழா நாளை (28ம் தேதி) துவங்குகிறது.
மேட்டுப்பாளையம் அருகே கே.ஜி. டெனிம் மில் வளாகத்தில், தென்திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இவ்விழா நாளை துவங்கி அடுத்த மாதம் 7ம் தேதி முடிய பத்து நாட்கள் நடக்கின்றன. முதல் நாள் மாலை 7.30 மணிக்கு அங்குரார்ப்பணத்துடன் விழா துவங்குகிறது, 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி ஊர்வலமும் நடக்
கிறது. 30ம் தேதி காலை சின்னசேஷ வாகனம், மாலை அன்னபக்ஷி வாகனம், 1ம் தேதி காலை சிம்ம வாகனம், மாலை முத்துப்பந்தல் வாகனம், 2ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், மாலை சர்வ பூபாள வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஆறாம் நாள் காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருமாலை சூடலும், மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் புறப்பாடும், மாலை கருட சேவையும், 4ம் தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்கரதமும், யானை வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 5ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம், 6ம் தேதி காலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டமும், மாலை குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 7ம் தேதி மாலை கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை மில் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.