/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டி.டி. மருத்துவக் கல்லூரியில் பல்கலைக் கழக தேர்வு துவக்கம்டி.டி. மருத்துவக் கல்லூரியில் பல்கலைக் கழக தேர்வு துவக்கம்
டி.டி. மருத்துவக் கல்லூரியில் பல்கலைக் கழக தேர்வு துவக்கம்
டி.டி. மருத்துவக் கல்லூரியில் பல்கலைக் கழக தேர்வு துவக்கம்
டி.டி. மருத்துவக் கல்லூரியில் பல்கலைக் கழக தேர்வு துவக்கம்
ADDED : ஆக 29, 2011 11:16 PM
திருத்தணி : டி.டி.மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பல்கலைக் கழக தேர்வு, நேற்று துவங்கியது.
வரும் 2ம் தேதி வரை, இந்தத் தேர்வு நடைபெறுகிறது.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாள்சத்திரம் அடுத்த புத்தூரில், இயங்குகிறது டி.டி.மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இதில், 150 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், டி.டி.கல்லூரிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், தமிழகத்தில் உள்ள மற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் போது, இக்கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இக்கல்லூரி மாணவர்களுக்கு, தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத, ஐகோர்ட் அனுமதியளித்தது. இம்மாதம் 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற்றன. நேற்று முதல் தியரி தேர்வு துவங்கியது. இந்த தேர்வுகள் செப்., 2ம் தேதி வரை நடைபெறுகிறது.