மோடியை எதிர்த்த ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு ஜாமின் கிடைக்குமா? அரசுக்கு நோட்டீஸ்
மோடியை எதிர்த்த ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு ஜாமின் கிடைக்குமா? அரசுக்கு நோட்டீஸ்
மோடியை எதிர்த்த ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு ஜாமின் கிடைக்குமா? அரசுக்கு நோட்டீஸ்

ஆமதாபாத் : குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாமின் அளிப்பது குறித்து, மாநில அரசுக்கு, கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், முதல்வர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என, போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார். முதல்வர் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு, கான்ஸ்டபிள் கே.டி.பந்த் சாட்சி என, சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறும் படி சஞ்சீவ் பட் என்னை மிரட்டி எழுதி வாங்கினார் என, கே.டி.பந்த் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
'இவரை போலீஸ் காவலில் ஒப்படைக்கக்கூடாது; அவரை அடித்து கொன்று விடுவார்கள்' என, அவரது மனைவி, கோர்ட்டில் மனு செய்திருந்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் தற்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஜாமின் அளிப்பது தொடர்பாக குஜராத் மாநில அரசுக்கு, செஷன்ஸ் கோர்ட் நீதிபதி வி.கே.வியாஸ், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். சஞ்சீவ் பட் ஜாமின் மனு தொடர்பான விசாரணை, இன்று நடக்கிறது.
கண்டன ஊர்வலம் : பீகார் மாநிலம் பாட்னாவில் கல்வியாளர் அபூர்வானந்த் தலைமையில் பல துறை வல்லுநர்கள், நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை கண்டித்து ஊர்வலம் சென்றனர். தனக்கெதிராக குரல் கொடுப்பவர்களை நரேந்திரமோடி ஒடுக்குவதாகவும், அரசு அதிகாரத்தை மோடி தவறாக பயன்படுத்துவதாகவும் ஊர்வலத்தில் சென்றவர்கள் கோஷம் எழுப்பினர்.


