/உள்ளூர் செய்திகள்/சேலம்/அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் முற்றுகையால் பரபரப்புஅஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் முற்றுகையால் பரபரப்பு
அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் முற்றுகையால் பரபரப்பு
அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் முற்றுகையால் பரபரப்பு
அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் முற்றுகையால் பரபரப்பு
ADDED : ஜூலை 14, 2011 01:35 AM
சேலம்: சேலம் குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி முன் வக்கீலுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய கோரி, வக்கீல்கள் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
சேலத்தை சேர்ந்த சேட்டு என்கிற நாராயணன் என்பவருக்கும், அவரது மனைவியாக இருந்த சசிகலாவுக்கும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சேலம் குடும்பநல நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது சசிகலா தரப்பில் வக்கீல் முரளி ஆஜராகி, நாரயணனிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது நாராயணன், வக்கீல் முரளியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் முரளி சேலம் அஸ்தம்பட்டி போலீஸிடம் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் சிவில் மற்றும் கிரிமினல் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், பொருளாளர் ராஜ்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை வழங்கினர். அத்துடன் சேட்டு மீது வழக்குபதிவு செய்ய கோரி திடீர் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


