ADDED : செப் 13, 2011 05:56 PM
திருச்சி : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணை மேயர் அன்பழகன், தி.மு.க.
பிரமுகர் குடமுருட்டி சேகர், ஷெரீப் ஆகியோர்களின் ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. செசசன்ஸ் கோர்ட்டில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். அதேபோல, நேருவின் தம்பி ராமஜெயத்தை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.