/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பால் கூட்டுறவு சங்கங்கள் கடும் சுறுசுறுப்பு :விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவாடாபால் கூட்டுறவு சங்கங்கள் கடும் சுறுசுறுப்பு :விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவாடா
பால் கூட்டுறவு சங்கங்கள் கடும் சுறுசுறுப்பு :விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவாடா
பால் கூட்டுறவு சங்கங்கள் கடும் சுறுசுறுப்பு :விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவாடா
பால் கூட்டுறவு சங்கங்கள் கடும் சுறுசுறுப்பு :விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவாடா
ADDED : ஜூலை 14, 2011 01:33 AM
ஈரோடு : விவசாயிகளுக்கான பால் பணம் உடனுக்குடன் பால் கூட்டுறவு சங்கங்கள் பட்டுவாடா செய்துள்ளன.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ஃபிப்ரவரி 16ம் தேதி முதல், அரசு உத்தரவுப்படி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தி, வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டிய நிலுவையும் உயர்ந்தது. பால் உற்பத்தியாளர்கள் நிலுவையின்றி பால் பணம் பெறும் வகையில், அரசு சார்பில் 1.63 கோடி முன்பணமும், இணையம் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 2.78 கோடி ரூபாய் என, 4.41 கோடி ரூபாய், பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு அரசு விடுவித்தது. ஒன்றிய நிதியில் இருந்து 91.63 லட்சம் ரூபாய் சேர்த்து 5.32 கோடி ரூபாய் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 81 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் 3,422 பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி, நேற்று முன்தினம் பட்டுவாடா செய்யப்பட்டது. கால்நடைத் தீவனம் தடையின்றி கிடைக்க, ஒன்றியத்துக்கு மாதம் ஒன்றுக்கு 523 டன் தீவனம், 'டான்ஃபெட்' மூலம் வழங்கவும், தாதுஉப்பு கலவை மாதம் 18 டன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கால்நடை டாக்டர் வாரம் இரு முறை சென்று சிகிச்சை அளிக்கவும், 30 சங்கத்துக்கு ஒரு டாக்டர் என 24 டாக்டர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்தப்படும். பால் கொள்முதல் அதிகரிக்கும் பொருட்டு, செயல் இழந்த 53 சங்கங்களை புதுப்பிக்கவும், புதிதாக பத்து சங்கம் ஏற்படுத்தவும் இம்மாதத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பணியாளர்கள் கிராமங்களுக்கு சென்று பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து, அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு 2009 - 10ம் ஆண்டுக்கான போனஸ், 2010 - 11க்கான விலை வித்தியாசத்தொகை, 2010 - 11ம் ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முன்னோடி திட்டங்கள் பால் உற்பத்தியாளர்களை சென்றடைய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.


