வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின்
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின்
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின்
ADDED : செப் 16, 2011 08:41 PM
சென்னை : மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
அவரது மகனுக்கும் முன் ஜாமின் வழங்கியது.நில அபகரிப்பு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில், வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி சுதந்திரம் முன்,விசாரணைக்கு வந்தது. வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார்.சென்னையில் தங்கியிருந்து, பூக்கடை போலீஸ் நிலையத்தில், தினசரி இரண்டு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார்.இதே வழக்கில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரனுக்கு, முன் ஜாமின் வழங்கப்பட்டது.