Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுயேட்சைகளின் பிரச்சார நோட்டீஸ் ஆர்டரால் பிரிண்டிங் தொழில் சுறுசுறு

சுயேட்சைகளின் பிரச்சார நோட்டீஸ் ஆர்டரால் பிரிண்டிங் தொழில் சுறுசுறு

சுயேட்சைகளின் பிரச்சார நோட்டீஸ் ஆர்டரால் பிரிண்டிங் தொழில் சுறுசுறு

சுயேட்சைகளின் பிரச்சார நோட்டீஸ் ஆர்டரால் பிரிண்டிங் தொழில் சுறுசுறு

ADDED : அக் 06, 2011 02:17 AM


Google News
சேலம்: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் பிரச்சார நோட்டீஸ்களுக்கு ஆர்டர் கொடுப்பதால், பிரிண்டிங் பிரஸ்கள், இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் ,17, 19 ஆகிய நாட்களில் நடக்கிறது. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கான சின்னம் உறுதி செய்ப்பட்டவுடன், பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி விட்டனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கி விட்டது.

பிரச்சாரம் முடிவடைவதற்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில் தங்களின் சின்னங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், தற்போது அதிக அளவில் பிரச்சார நோட்டீஸ்கள், போஸ்டர்களுக்கு பிரிண்டிங் பிரஸ்களில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால், பிரிண்டிங் பிரஸ் தொழில் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பிரிண்டிங் பிரஸ்கள், கடந்த சில நாட்களாக இரவு பகலாக இயங்கி வருகின்றன.

ஆயுத பூஜையை முன்னிட்டு, பிரிண்டிங் பிரஸ்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், வேட்பாளர்களிடம் எடுக்கப்பட்ட ஆர்டரை முடித்துக் கொடுப்பதற்காக, நேற்று ஆயுத பூஜை நாளிலும் பிரஸ்கள் இயங்கின.

சுயேட்சை வேட்பாளர்களிடம் இருந்து, பிரச்சார நோட்டீஸ்களுக்காக ஆர்டர் குவிந்து வருவதால் நோட்டீஸ்களுக்கான விலையை வழக்கமான விலையில் இருந்து, 30 முதல், 40 சதவீதம் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக, 1000 நோட்டீஸ்களுக்கு பயன்படுத்தும் பேப்பரை பொறுத்து, 800 முதல், 1,100 ரூபாய் என்பது, தற்போது, 1,400 முதல், 2,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் என்பதால், இந்த விலை உயர்வை வேட்பாளர்களும் கண்டு கொள்வது இல்லை.

இது குறித்து சேலத்தை சேர்ந்த பிரண்டிங் பிரஸ் உரிமையாளர் முரளி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிட் நோட்டீஸ் ஆர்டர் பிரிண்டிங் பணிகள் அதிக அளவில் பிரஸ்களுக்கு கிடைத்துள்ளது. இதனால், தற்போது அனைத்து பிரஸ்களும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக விடுமுறை என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. பிரிண்டிங் தொழில் சுறுசுறுப்பு அடைந்ததை அடுத்து தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தொழிலாளர்களுக்கும் மவுசு அதிகரித்து, அவர்களுக்கான கூலி 35 சதவீதம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ளதால், அனைத்து பிரஸ்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us