2011-ம் ஆண்டின் மிஸ்யுனிவர்ஸாக அங்கோலா நாட்டு அழகி தேர்வு
2011-ம் ஆண்டின் மிஸ்யுனிவர்ஸாக அங்கோலா நாட்டு அழகி தேர்வு
2011-ம் ஆண்டின் மிஸ்யுனிவர்ஸாக அங்கோலா நாட்டு அழகி தேர்வு
UPDATED : செப் 13, 2011 11:55 AM
ADDED : செப் 13, 2011 09:24 AM
சாவ்போலோ:(பிரேசில்): 2011-ம் ஆண்டின் மிஸ் யுனிவர்சாக அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலாலூப்ஸ் என்ற மாடலிங் அழகி தேர்வு பெற்றார். 2011-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் நடந்தது.
இதில் 89 நாடுகளைச் சேர்ந்த மாடலிங் அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த வாசுகி சங்க்வாலி, 26 என்பவரும் கலந்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்ற மெக்சிகோ நாட்டின் ஜிமினே நவரத்தி என்பவரும் கலந்து கொண்டார்.
முதல் சுற்றுப்போட்டியிலேயே இந்தியாவின் வாசுகிசங்க்வாலி, 26 முதல் 10 இடங்களில் கூட இடம் பெறாமல் வெளியேறினார். பின்னர் நடந்த முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, பிரான்ஸ்,உக்ரைன், போர்ச்சுகல், பனாமா, பிலிப்பைன்ஸ், அங்கோலா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர்.இறுதிச்சுற்றில் அங்கோல நாட்டின் லைலா லோப்ஸ், 2011-ஆம் ஆண்டி பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்றார்.
முன்னதாக இந்தாண்டு பிரபஞ்ச அழகிப்போட்டி 60-வது போட்டி என்பதால் பிரேசில் நாட்டில் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தாண்டு 89 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.