/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று துவக்கம்திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று துவக்கம்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று துவக்கம்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று துவக்கம்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று துவக்கம்
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனை தொடர்ந்து நேற்று கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது.தமிழ்கடவுள் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் ஆவணி திருவிழா இன்று காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கடக லக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணியில் இருந்து 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. கொடியேற்றத்தை தொ டர்ந்து நேற்று நகர வீதிகளில் கொடிபட்ட ஊர்வலம் நடந்தது.
விழாவில் 5ம் திருநாள் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாள் அன்று காலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகுசட்ட சேவையும், 8.30 மணிக்கு மேல் வெற்றிவேர் சப்பர புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவப்பு சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 8ம் திருநாளன்று சுவாமி காலை 10.30 மணிக்குள் பச்சைசாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருநாள் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.