Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஸ்ரீரங்கம் கோவிலில் பஞ்சாங்கம்:ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலில் பஞ்சாங்கம்:ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலில் பஞ்சாங்கம்:ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலில் பஞ்சாங்கம்:ஐகோர்ட் கிளை உத்தரவு

ADDED : ஆக 19, 2011 11:24 PM


Google News
மதுரை:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில், பஞ்சாங்கம் வாசிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து, 72 வயதான பட்டர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, இந்து அறநிலையத்துறையை பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. விசாரணை முடியும் வரை, பட்டர், பஞ்சாங்கம் வாசிக்கவும் அனுமதித்தது.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த லட்சுமி நரசிம்மபட்டர், 72, அவரது மகன் செந்தாமரை கண்ணன் பட்டர் தாக்கல் செய்த ரிட் மனு:நாங்கள், ராமனுஜரின் முக்கிய சீடர்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் நான், பஞ்சாங்கம் வாசித்து வந்தேன். எனக்கு, 72 வயதாகி விட்டதால், பஞ்சாங்கம் வாசிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், ஸ்ரீதரபட்டருக்கு பஞ்சாங்கம் வாசிக்க, இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அனுமதி தந்தார். அவரை நியமித்தது தவறு. வம்சாவழியாக எங்கள் பரம்பரையினர் வாசிக்க வேண்டும். எனவே, எங்களை பஞ்சாங்கம் வாசிக்க அனுமதிக்க வேண்டும். எனக்கு பின், என் மகன் வாசிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.மனு குறித்து பதிலளிக்க, இந்து அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனருக்கு நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார். அதுவரை தற்போதைய நிலை தொடரவும், மனுதாரர் பஞ்சாங்கம் வாசிக்கவும் நீதிபதி அனுமதித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us