ADDED : அக் 08, 2011 10:38 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலில் தபால் ஓட்டுக்களை, ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் மாலை 6 மணி வரை பதிவு செய்யலாம், என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தபால் ஓட்டு அளிக்க தகுதியானவர்கள். இவர்கள் படிவம் 15 ல் விண்ணப்பித்து, படிவம் 16 ல் உள்ள தேர்தல் பணிச்சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் மூலம் ஓட்டளிக்க விரும்புவோர், பணிச் சான்றிதழை தபால் ஓட்டுடன் இணைக்க வேண்டும். ஓட்டுப் பதிவு செய்து, எண்ணிக்கைக்கு முதல் நாள் மாலை 6 மணி வரை கொடுக்கலாம். தபால் ஓட்டு பெட்டியை, அன்று மாலை 6 மணிக்கு மூடி முத்திரையிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.


