மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜெ.,யுடன் இணைந்து குரல் கொடுக்க வைகோ அழைப்பு
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜெ.,யுடன் இணைந்து குரல் கொடுக்க வைகோ அழைப்பு
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜெ.,யுடன் இணைந்து குரல் கொடுக்க வைகோ அழைப்பு
ADDED : ஜூலை 31, 2011 03:18 AM

திருநெல்வேலி: மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக முதல்வருடன் இணைந்து தமிழகத்தின் குரல் ஒலிக்கவேண்டும் என வைகோ தெரிவித்தார். நெல்லையில் ம.தி.மு.க.,சார்பில் வரும் செப்டம்பர் 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கட்சி பொது செயலாளர் வைகோ தலைமை வகித்தார். ஆலோசனைக்கு பிறகு வைகோ கூறியதாவது: 94ம் ஆண்டு நடந்த எழுச்சி பேரணியை போல, 95 மாநில மாநாடு போல,நெல்லையில் நடக்க உள்ள மாநாடும் ம.தி.மு.க.,விற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தரஉள்ளது.
மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளைபராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுஊட்டும் வகையில் டில்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள் இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும். இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும். இதன் மூலம் தெற்கு சீமைக்கே பாதிப்பு ஏற்படும். இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். அதற்கு வழிவைக்க கூடாது என எச்சரிக்கிறேன். தமிழக உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க.,போட்டியிடும். சமச்சீர் கல்வி விஷயத்தில் தமிழக அரசின் கொள்கை மிக மிக தவறானது. ஒரு தலைமுறையை பாழாக்க கூடியதாக உள்ளது. நான் எடுத்த முடிவை மாற்றமாட்டேன் என இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. துரதிர்ஷ்டவசமானது என்றார்.