வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,
வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,
வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,
ADDED : ஆக 19, 2011 06:23 PM
நாகப்பட்டினம்: வேளாங்கன்னி மாதா கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நடமாடும் ஏ.டி.எம்., மையங்கள் செயல்பட உள்ளதாக, கலெக்டர் முனுசாமி கூறினார்.
நாகை அடுத்த, வேளாங்கன்னி மாதா கோவில் ஆண்டுத் திருவிழா, ஆக., 29ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முனுசாமி தலைமையில் நடந்தது. அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் முனுசாமி கூறியதாவது: திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கன்னியில் ஒரு வழி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும், 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேளாங்கன்னியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்., மையங்களில் ஒரே நேரத்தில், ஏராளமானோர் பணம் எடுப்பது சிரமம் என்பதால், நடமாடும் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.