/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்; பணிகள் மும்மரம்உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்; பணிகள் மும்மரம்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்; பணிகள் மும்மரம்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்; பணிகள் மும்மரம்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்; பணிகள் மும்மரம்
ADDED : செப் 16, 2011 09:57 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி 33 வார்டுகளில் 43 ஆயிரத்து 518 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 33 வார்டுகள், தலா 11 வார்டுகள் என, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) இளங்கோவனும், நகர் நல அலுவலர் பிரதீப்கிருஷ்ணகுமார் ஒன்று முதல் 11 வார்டுகளுக்கும், மேலாளர் சவுந்திரம் 12 முதல் 22 வார்டுகளுக்கும், கணக்கர் தங்கராஜ் 23 லிருந்து 33 வார்டுகளுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகரில் மொத்தமுள்ள 51 ஓட்டுச்சாவடிகளில் ஆண், பெண்களுக்கு என தனித்தனியாகவும் இரண்டும், இருபாலருக்கும் சேர்த்து 49 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமுகை பேரூராட்சி: சிறுமுகை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் விஸ்கோஸ் ஆலை, அலுவலர், பணியாளர் குடியிருப்புகள் 2வது வார்டில் அமைந்துள்ளன. இங்கு ஒருவர் கூட குடியில்லாததால், இந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாது. மீதமுள்ள 17 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறும்.இப்பேரூராட்சியில் மொத்தம் 12 ஆயிரத்து 924 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 18 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல் அலுவலர் ஜெகதீசனும், சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் ஒன்று முதல் 10 வார்டுகளுக்கும், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி 11 லிருந்து 18 வரையுள்ள வார்டுகளுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெறுகின்றன.