ADDED : ஆக 24, 2011 01:21 AM
பரவை:பரவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை,
நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் பேரூராட்சி தலைவர்
மனோகரன் தலைமை வகித்தார். எஸ்.எம்.டி.அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு
இலவச சீருடை, நோட்டுபுத்தகம், பைகள் வழங்கப்பட்டன. சத்துணவு பணியாளர்
பாக்கியம் நினைவாக சமூக ஆர்வலர் சவுந்திரபாண்டியன், இன்ஜினியர் பிரபாகரன்
ஆகியோர் பெஞ்சுகள் வழங்கினர். தலைமை ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.


