/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/இரு பஞ்., தலைவர்கள் உள்பட 197 பேர் போட்டியின்றி தேர்வுஇரு பஞ்., தலைவர்கள் உள்பட 197 பேர் போட்டியின்றி தேர்வு
இரு பஞ்., தலைவர்கள் உள்பட 197 பேர் போட்டியின்றி தேர்வு
இரு பஞ்., தலைவர்கள் உள்பட 197 பேர் போட்டியின்றி தேர்வு
இரு பஞ்., தலைவர்கள் உள்பட 197 பேர் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 06, 2011 03:38 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,323 பதவியிடங்களுக்கு
வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்
நடக்கிறது. இதில் இரண்டு பஞ்சாயத்து தலைவர் பதவி, இரு டவுன் பஞ்சாயத்து
கவுன்சிலர் பதவி உட்பட 197 பதவியிடங்களுக்கு ஒருவரே வேட்பாளராக
போட்டியிடுவதால், அந்த பதவியிடங்களுக்கு போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது.
இதன்படி, பெரம்பலூர் யூனியனில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியிடம் மற்றும்
வேப்பூர் யூனியனில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியிடம், குரும்பலூர் டவுன்
பஞ்சாயத்தில் ஒரு கவுன்சிலர் பதவியிடம், லப்பைக்குடிகாடு டவுன்
பஞ்சாயத்தில் நான்கு கவுன்சிலர் பதவியிடம், பூலாம்பாடி டவுன் பஞ்சாயத்தில்
ஒரு கவுன்சிலர் பதவியிடம் ஆகிய பதவியிடங்கள் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் உறுப்பினர் பதவிக்கு பெரம்பலூர்
யூனியனில் 28 பேரும், வேப்பந்தட்டை யூனியனில் 67 பேரும், ஆலத்தூர்
யூனியனில் 37 பேரும், வேப்பூர் யூனியனில் 57 பேரும் என மொத்தம் 197 பேர்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


