ADDED : ஆக 01, 2011 01:51 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, நான்கு மாதங்களாக பூட்டிக் கிடந்த கோவிலின் பூட்டை உடைத்து, அங்கிருந்த, 10 சாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த, புன்னப்பாக்கம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புண்ணியக்கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பணிபுரிந்த பூசாரி, நான்கு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டதால், கோவில் பூட்டிக் கிடந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த சோமசுந்தர், இரண்டு விநாயகர், புனிதவள்ளி அம்மன், பார்வதி, அம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை, திருஞான சம்பந்தர் ஆகிய செப்பு சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது.இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.