Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு

மாநகராட்சி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு

மாநகராட்சி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு

மாநகராட்சி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு

ADDED : செப் 27, 2011 04:33 AM


Google News

மதுரை:மாநகராட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 1,121 ஆக அதிகரித்தது.

மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளுக்கு 1,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டுகளில் 1,200 ஓட்டுகளுக்கு மேல் இருந்தால், ஆண், பெண் என தனி ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சுடலை முத்துப்பிள்ளைத்தெருவில் வீடுகள் இடிக்கப்பட்டதால் வெளியேறிய 300 பேர் கணக்கெடுப்பில் விடுபட்டனர்.



வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். இதன் மூலம் அப்பகுதியின் ஓட்டு எண்ணிக்கை 1,500 ஆக உயர்வதால், ஆண்,பெண் எனதனி ஓட்டுச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1,121 ஆக அதிகரிக்கும். செப்., 29 வரை புதிய வாக்காளர் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ளதால், வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 'இதனால் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக,' அதிகாரிகள் கூறுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us