/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பஞ்சாயத்துக்கள் இணைப்பால் பணிச்சுமை அதிகரிப்புஅதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாட்டம்பஞ்சாயத்துக்கள் இணைப்பால் பணிச்சுமை அதிகரிப்புஅதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாட்டம்
பஞ்சாயத்துக்கள் இணைப்பால் பணிச்சுமை அதிகரிப்புஅதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாட்டம்
பஞ்சாயத்துக்கள் இணைப்பால் பணிச்சுமை அதிகரிப்புஅதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாட்டம்
பஞ்சாயத்துக்கள் இணைப்பால் பணிச்சுமை அதிகரிப்புஅதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாட்டம்
ADDED : செப் 03, 2011 01:46 AM
தூத்துக்குடி, செப். 3-தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட
பஞ்சாயத்துக்களையும் சேர்த்து பணிகள் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்
போதிய பணியாளர்கள் இல்லாமல் மாநகராட்சி கடும் திண்டாடத்தில் தவித்து
கொண்டிருக்கிறது. விரைவாக புதிய பணியாளர்களை நியமிக்காவிட்டால் தேர்தல்
நேரத்தில் பணிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் உருவாகி
உள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று தற்போது புதிய
இணைப்புகளுடன் அக்டோபர் மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல்
ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே சமயம் போதிய
பணியாளர்கள் இல்லாமல் மாநகராட்சியில் கடும் திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் அனை த்து பிரிவுகளில்
உள்ள தற்போதுள்ள பணியாளர்களே போதுமானதாக இல்லை. கிளார்க் லெவலில் அதிகமான
பணியிடம் காலியாக உள்ளது. பைல் எழுதி வைக்க ஆள் இல்லை. முக்கியமாக நகரை
சுத்தமாக வைத்திருக்க வேண்டிய சுகாதார பிரிவில் சுமார் 800க்கும் மேற்பட்ட
துப்புரவு பணியாளர்கள் இருந்த இடத்தில் தற்போது சுமார் 300 பேர் வரை தான்
இருப்பதாக கூறப்படுகிறது.
பொறியியல் பிரிவிலும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள்
வரை கடும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வேலைகள் நடக்கும் இடத்தில் ஆய்வு
செய்வது முதல் கண்காணிப்பு செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதாக
கூறப்படுகிறது. இதே நிலை வருவாய் பிரிவு முதல் நகரமைப்பு பிரிவு முதல்
அனைத்து பிரிவுகளில் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே அதிகாரிகள், ஊழியர்கள் தட்டுப்பட்டால் கடும் திண்டாட்டத்தில்
மாநகராட்சி இருந்து வருகிறது. இந் நிலையில் மாநகராட்சியுடன் 5 கிராம
பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம்,
அத்திமரப்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான் ஆகிய பஞ்சாயத்துக்களும்
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மொத்தம் 60 வார்டுகளுடன் தூத்துக்குடி
மாநகராட்சி தேர்தலை சந்திக்க உள்ளதாக அரசாணையும் வெளியாகி விட்டன. தற்போது
இணைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மாநகராட்சியினர் என்ன தேவை, உடனடி தேவை
என்பதை அறிந்து பணிகளை இப்போதே செய்ய வேண்டும் என்று சென்னை அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இருக்கின்ற ஏரியாவில் பணி பார்ப்பதற்கே கடும்
சிரமமாக உள்ளது.இந் நிலையில் இணைக்கப்பட்ட பகுதியிலும் பணிகள் செய்ய
சொன்னால் எப்படி முடியும். இதனால் பெரிய பிரச்னையாக தலைவலியாக இருப்பதாக மா
நகராட்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வட்டாரத்தில் கடும் புலம்பல்
காணப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி
மாநகராட்சிக்கு அரசு உடனடியாக பணியாளர்களை நியமனம் செய்தால் தான்
சேர்க்கப்பட்ட பகுதிகளிலும் பணி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். உடனடியாக
இதனை செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒட்டு மொத்த மாநகராட்சி அதிகாரிகள்
மற்றும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி
வட்டாரங்கள் கூறியதாவது;அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சி
பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இருக்கிற ஊழியர்களை வைத்து
சமாளித்து வருகிறோம். தற்போது 5 பஞ்சாயத்துக்களிலும் பணி செய்ய
வேண்டியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து
கொண்டிருக்கிறோம்.இதற்கிடையில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வது குறித்து
நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இ ருந்து தற்போது தகவல்
கேட்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை அனுப்பி உள்ளோம். விரைவில் புதிய
அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை நியமனம் செய்தால் தான் பணிகளை
சிறப்பாகவும், செம்மையாகவும் செய்ய முடியும். வே லை நடக்கும் இடங்களுக்கு
அதிகாரிகள் சென்று பார்த்தால் தான் ஒழுங்காக வேலை நடக்கும். ஆனால் அனைத்து
வே லைகளையும் பார்ப்பதற்கு அதிகாரிகள் இல்லை. இதனால் தரம் குறைவு ஏற்பட
வாய்ப்பு ஏற்படும். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு விரைவில் பணியாளர்கள்
நியமனம் தான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.