ADDED : ஆக 28, 2011 10:14 PM
திண்டுக்கல் : படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், சுயதொழில் கடன், மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.உற்பத்தி, சேவை, வியாபாரத்தொழிலுக்கு முறையே அதிகபட்சமாக ஐந்து, மூன்று, ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிகள் வழங்கும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதிகபட்ச வயது பொதுபிரிவினருக்கு 35, சிறப்பு பிரிவினருக்கு 45. குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம். ரேஷன் கார்டு நகல் அல்லது இருப்பிடசான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அரசு மானியமாக வழங்குகிறது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 300 பேருக்கு கடன் வழங்கப்படும். விபரங்களுக்கு பொது மேலா ளரை அணுகலாம்.