/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாநில பெண்கள் ஹாக்கி அணி பாளை. யில் தேர்வு துவக்கம்மாநில பெண்கள் ஹாக்கி அணி பாளை. யில் தேர்வு துவக்கம்
மாநில பெண்கள் ஹாக்கி அணி பாளை. யில் தேர்வு துவக்கம்
மாநில பெண்கள் ஹாக்கி அணி பாளை. யில் தேர்வு துவக்கம்
மாநில பெண்கள் ஹாக்கி அணி பாளை. யில் தேர்வு துவக்கம்
ADDED : செப் 06, 2011 01:04 AM
திருநெல்வேலி : பாளை.
யில் மாநில பெண்கள் ஹாக்கி அணிக்கு தேர்வு துவங்கியது. இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டுக்குழுமம், மாநில கல்வித்துறை சார்பில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, மேஜைபந்து, ஹாக்கி மாநில அணிகளுக்கு தகுதித்தேர்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களில் ஒவ்வொரு விளையாட்டுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில தகுதித்தேர்வில் பங்கேற்று வருகின்றனர். மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தேசிய போட்டிக்கு அனுப்பப்படவுள்ளனர். பாளை. அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாநில பெண்கள் ஹாக்கி அணி தேர்வு நேற்று துவங்கியது. 32 மாவட்டங்களை சேர்ந்த 180 மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் 16 மாணவிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் நெல்லை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயக்குமாரி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிரோன்மணி சந்திரா தேர்வை நடத்தினர். ஒவ்வொருவரின் தகுதி மதிப்பிடப்பட்டது. தேர்வு இன்று தொடர்ந்து நடக்கிறது. மூன்று பிரிவுகளிலும் தகுதி பெற்ற மாணவிகள் விபரம் இன்று அறிவிக்கப்படுகிறது.